அரபி மொழியின் முக்கியத்துவத் தொன்மையும், தமிழ் - அரபி உறவும்
Abstract
தமிழ் மொழி மீது அரபி மொழியின் தாக்கங்களையும், அரபி மொழி மீது தமிழ் மொழியின் தாக்கங்களையும் நாம் உணர முடியும். இந்த தாக்கங்கள் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு காலகட்டங்களில் கலாச்சார, இலக்கிய மற்றும் மத செல்வாக்கைக் கொண்டிருந்தன. கடல் வணிக நடவடிக்கைகளின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ்-தமிழர்கள், அரபி மொழி-அரேபியர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்பது குறைவாகவே அறியப்படுகிறது. அரபி மொழி மற்றும் தமிழ்-அரபி உறவின் மரபு மற்றும் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்வதை இந்தக் கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு திராவிட-தமிழ் மற்றும் ஸாமிய-அரபி மொழி தொடர்புக்கு ஒரு தெளிவான அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.